Online Library TheLib.net » Manapenne Unakkaga
cover of the book Manapenne Unakkaga

Ebook: Manapenne Unakkaga

00
01.03.2024
0
0

"மணப்பெண்ணே உனக்காக" எனும் இந்தத் திருமணப் பரிசளிப்பு நூல் வெளியீடு நீண்ட நாட்களாகவே நான் கண்ட இலக்கியக் கனவு.

ஒரு குடும்பத்தின் ஆணிவேர் குடும்பத் தலைவி. ஒரு சிறந்த குடும்பத் தலைவனின் வெற்றிக்குப் பின்னாலும், குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்குப் பின்னாலும் தூணாக நின்று பொறுப்புக்களை ஏற்று திறம்பட இல்லறத்தை நிர்வகிப்பவள்தான் பொறுப்பான இல்லத்தரசி.

பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்து, வண்ண வண்ணக் கனவுகளுடன் பட்டாம்பூச்சியாய் கல்லூரி வாழ்வில் பவனி வந்து, எண்ணற்ற எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் மனதில் தேக்கி மணமேடை நோக்கி மணநாளில் அடியெடுத்து வைத்து, மணப் பந்தலில் மணமகனின் கரம் பற்றி, அவர் திருக்கரத்தால் மணநாண் சூட்டப்பெற்று "மனைவி" எனும் அந்தஸ்தைப் பெறும் போதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் "பொறுப்பு" எனும் குழந்தை அவளை அறியாமலேயே மடியில் வந்து அமர்கிறது. தன் இல்லறத்தைத் திறம்பட நிர்வகிக்கும் பெண்தான் சமுதாயத்தில் உயர்த்தப்படுகிறாள்.

இல்லறத்தை நல்லறமாக நடத்த உதவும் சிறந்த நூல் இது. அறிவுரைக் கட்டுரைகள் அதாவது மனைவி, தாய், மருமகள் எனும் நிலைகளில் ஒரு பெண் நடந்து கொள்ள வேண்டிய முறை, ஆலோசனைக் கட்டுரைகள் அதாவது பூஜைப் பாடல்களிலிருந்து, கோலம், குழந்தை வளர்ப்பு, அழகுக் குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள், ஆரோக்கியக் குறிப்புகள், மற்றும் சமையல் குறிப்புகள் 200க்கும் மேற்பட்டவை, சமையலறைத் துணுக்குகள் உள்ளடங்கிய நூல் இது. ஒரு மணப்பெண்ணிற்குத் திருமணப் பரிசு நூலாக அன்பளிப்பு செய்ய ஏற்ற நூலாக இதை வடிவமைத்திருக்கிறேன்.

இதில் வெளிவந்துள்ள கட்டுரைகள், துணுக்குகள், சமையல் குறிப்புகள் ஆகியவை ஏற்கனவே நான் எழுதி பிரபல மாத இதழ்களான மங்கை, மங்கையர் மலர், வாசுகி, பெண்மணி, இதயம் போன்றவற்றில் வெளிவந்தவை.

Download the book Manapenne Unakkaga for free or read online
Read Download

Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen