Online Library TheLib.net » கடாரம்
cover of the book கடாரம்

Ebook: கடாரம்

Author: மாயா

00
15.02.2024
0
0
பதினோறாம் நூற்றாண்டு.

*மேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்.
*இஸ்லாமிய சன்மார்க்கம் எழுச்சி கண்ட காலம்.
*கீழைத்தேசங்களில் வணிகம் செழிப்புற்றிருந்த காலம்.
*சீனத்தில் சொங் சாம்ராஜ்யம் எழுச்சியுற்றிருந்த காலம்.
*பரதகண்டத்தில் உத்தரபதத்திலே கஜினி கால் வைத்த காலம்.

தக்கணத்துச் சோழசாம்ராஜ்யம் வடக்கே கங்கை வரையும், மேற்கே சேர பாண்டிய தேசங்களும், தெற்கே ஈழமும், பண்ணாயிரந்தீவு, சாந்திமத்தீவும் இன்னும் பலவும் கொண்டு பரதவர்ஷத்தில் குறிப்பிடத்தக்க நிலப்பகுதியை தன் ஆதிக்கத்தில் சேர்க்கத் துணிந்த காலம். சோழர்களின் பொற்காலம்.

இத்தகைய காலகட்டத்தில் இந்தப்பூவுலகின் அத்தனைத் தேசங்களும் வணிகத்தொடர்பில் பலமான இணைப்பில் இருந்தன.

சொங் மன்னன் பட்டுப்பாதையை நிலவழியிலிருந்து நீர்வழிச்சாலைக்கு மாற்றியிருந்தான். இதனால் வணிகத்தில் மேற் திக்குத் தேசங்களை விட கடலடுத்த கீழ்த்திக்குத் தேசங்களின் மேலாண்மை அதிகமாய் இருந்த காலம். மேலும் சொங் மன்னன் தன் வணிகக் கொள்கைகளிலும் - அயல்தேசத்து வணிகர்கள் விரும்பத்தக்க- பல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தான். அவை காரணமாய் தேசங்கள் அத்தனையும் சீனத்தை நோக்கி போட்டி போட்டுக்கொண்டு கடலைக் கடைந்தன.

எக்காலத்திலும் நாடுகளுக்கிடையே போட்டியும் பொறாமையும் எழும்புவதற்கு ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும் ஆழமாக நோக்கின் பெரும்பாலும் அவை வணிகரீதியான காரணங்களையே மையமாகக் கொள்கின்றன. அதிலும் வாணிபத்தின் உண்மை வலுவை முழுவதுமாய் உணர்ந்திருந்த இந்த காலகட்டத்தில் தேசங்களின் அரசியலில் வணிகம் ஸ்திரமான இடத்தைக் கொண்டிருந்தது என்பதை நாம் சரித்திர நிகழ்வுகளின் வழியே காண முடிகிறது. அத்தகைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் தான் நம் கதையும் அமைந்திருக்கிறது.

பதினோறாம் நூற்றாண்டில், இந்தக் கதைக்காக நாம் செல்வது முதலாம் இராஜேந்திரச்சோழன் அரசாண்ட காலத்துக்கு.
-------
கடாரம் - மாயா
Download the book கடாரம் for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen