Online Library TheLib.net » ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
cover of the book ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

Ebook: ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

00
15.02.2024
0
0
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வந்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நூலில் சுஜாதா எல்லா ஆழ்வார்களையும் ஆண்டாளயும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

கிபி 650 முதல் 950 வரையிலான காலத்தைத் தமிழில் பக்தி இலக்கிய காலம் என்பர். இதில் வைணவத்தைச் சார்ந்த பாடல்கள் "நாலாயிர திவ்யப் பிரபந்தம்" என்று நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன. இவைகளை இயற்றிய ஆழ்வார்கள் பக்தி நெறிகளையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருமாலை எப்போதும் மறக்காதவர்கள். திருமால் ஒருவனே பரம்பொருள் என்று நிரூபித்தவர்கள். மனித நேயத்தை வளர்த்தவர்கள். தமிழுக்கு மேன்னையளித்தவர்கள். இவர்கள் அனைவரும் பகவானின் அம்சங்கள் என்று கருதப்படுகிறார்கள்.

ஆழ்வார்களை எளிய தமிழில் அவர்கள் காலம் ,வாழ்க்கை பற்றிய சரித்திரக் குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி பல பாடல்களின் நேரடியான பொருளைச் சொல்லும் இந்நூலின் முதல் நோக்கம் ஆழ்வார்களைப் பற்றியே அறியாதவர்களுக்கு அதன் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. மேற்கொண்டு அவர்கள் மேல் ஈடுபாடு ஏற்படுத்துவதே. மேற்கொண்டு அவர்கள் பாடல்களின் உள்ளர்த்தங்களையும் ஸ்வாபதேசங்களையும் அறிய விரும்பினால் அவைகளை விரிவாக பல வைணவ நூல்களில் காணலாம். வைணவம் என்னும் மகா சாகரத்தின் கரையில் இருந்து கொண்டு அதை வியப்பாகப் பார்த்து ஆழ்வார்கள் மேல் ஒரு பிரமிப்யையும் மரியாதையையும் வாசகர்களிடம் ஏற்படுத்துகிறார் சுஜாதா

வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக் கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.

---

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
Download the book ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen