Online Library TheLib.net » தமிழ் இசை இலக்கண வரலாறு
cover of the book தமிழ் இசை இலக்கண வரலாறு

Ebook: தமிழ் இசை இலக்கண வரலாறு

00
29.01.2024
0
0
தமிழ் இசை இலக்கிய வரலாற்றைத் தொடர்ந்த 17 அத்தியாயங்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கால எல்லையுடைய தமிழ் இயல் இலக்கிய, இலக்கண நூல்களிலிருந்தும் பிற்கால இசையிலக்கிய நூல்களிலிருந்தும் தமிழிசை வளர்ச்சி வரலாற்றையும் தமிழ் இசை இலக்கியத்தையும் (சாகித்தியத்தையும்), இசைவாணர் களையும் (சாகித்திய கர்த்தாக்களையும்) பலநிலைகளில் தமிழ் இசை இலக்கிய வரலாறு என்னும் நூலில் ஆராய்ந்தோம். தமிழிசை மரபு இந்தியாவிற்கே உரிய பொதுமரபு என்பதோடு பழமையானது என்றும் தமிழில் கீர்த்தனை மரபும் பழமையானது என்றும் பலநிலைகளில் அந்நூலிற் காட்டினோம். தமிழிசை மரபே இந்தியாவின் ஆதி இசைமரபு என்றும் அதிலிருந்தே பிற்காலத்து வளர்ச்சிகள் உருவாயின என்றும் தெளிவுறுத்தினோம்.

அந்நூலினைத் தொடர்ந்த இரண்டாம் தொகுதியாக இந்நூல் அமைகிறது.

தமிழ் இசை இலக்கண வரலாறு என்னும் இந்நூல் 16 அத்தியாயங்களைக் கொண்டு, தமிழ் இசை இலக்கண நூல்களை (இலட்சண கிரந்தங்களை) ஆராய்வதை முதன்மையாகக் கொள்ளும்.
பொதுவாக சங்கீத வித்துவான்களில் பெரும்பான்மையோருக்கு - பாகவதர்கள் ஆகட்டும். தமிழிசைக்காரர்களாகட்டும், - இசை இலக்கணம் கூறும் நூல்கள் யாவை, அவற்றில் என்ன பொருள் சொல்லப்பட்டது, அவற்றின் காலம் என்ன, ஒன்றுக்கொன்று தொடர்பு என்ன என்பதொன்றுமே தெரியாது வடமொழி நூல்களையும் தெரியாது, தமிழ்நூல்களையும் தெரியாது. (அபூர்வமாய்ச் சிலரே சிலவற்றை அறிந்திருக்கக்கூடும் அவர்களுக்கு எமது வணக்கம். அவர்களை இங்குக் கருதவில்லை). தமிழ் இசை இலக்கண வரலாறு என்னும் இந்த நூலில் தமிழிலும், வடமொழியிலும் இருந்த நூல்களையும் இருக்கின்ற நூல்களையும் ஓரளவு அறிமுகப்படுத்த முயல்கிறோம்.

இங்கு ஆய்ந்து குறிப்பெழுதப்பட்டுள்ள இசை இலக்கண நூல்களை (இலட்சணக் கிரந்தங்களைப்) பின்வருமாறு பாகுபடுத்தி அமைத்திருக்கிறோம்.

தமிழ் இசை இலக்கண நூல்கள்
வடமொழி இசை இலக்கண நூல்கள்
பரதம் கூறும் நூல்கள்
தாளம் கூறும் நூல்கள்

இந்நான்கு பிரிவுகளிலும் இறந்துபோன நூல்களும், அச்சிட்டு வழங்கும் நூல்களும் சொல்லப்படும்.
Download the book தமிழ் இசை இலக்கண வரலாறு for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen