Online Library TheLib.net » தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 2
cover of the book தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 2

Ebook: தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 2

00
29.01.2024
0
0
தமிழக இசைவரலாறு கடைசி 300 ஆண்டுகளின் வரலாறாகவே இருந்துவருகிறது. இவ்வாறு இருந்து வருவதை மீண்டும் மீண்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிவருவது வளர்ச்சியைக் காட்டாது. தமிழிசை - தொன்மையானது; வளப்பமானது. எனவே இசைவரலாறு, தொல்காப்பியம் தொடங்கி எழுதப்படுதல் வேண்டும். தொல்காப்பியத்தில் பல்வேறு இசைக் குறிப்புக்கள் - பண் டைய பண்கள் பற்றியும், தாளங்கள் பற்றியும் காணக் கிடைக்கின்றன. இக்களஞ்சியம் இவற்றைத் தொகுத்து ஆங்காங்கு உரிய தலைப்புக்களில் விளக்கிச் செல்லுகிறது. இவ்விளக்கம் தமிழ்த்துறையி னர்க்குப் பயன்படுவது.

இனி, இக்கலைக்களஞ்சியம் தேவாரம், திருவாசகம் முதலிய பக்தி இலக்கிய இசைப்பகுதி கட்குச் சிறப்பிடம் தந்துள்ளது என்பது அறிந்தின்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களில் காணப்படும் இசைக் குறிப்புக்களுடன் சங்க இலக்கிய இசைக் குறிப்புக்கள் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. இதுகாறும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் விளக்கப்படாமல் விட்டுவந்த ஏராள மான இசைக்குறிப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறைச்சொல் பல்வேறு இலக்கியங்க ளில் இடம் பெற்றிருப்பின் அவற்றுள் சிறப்பானவைகளைத் தொகுத்து இணைத்துக் காட்டுகிறது இக்களஞ்சியம்.

இசைச்செய்திகளை விளக்குங்கால் சங்க இலக்கிய மேற்கோள்கள் பெரிதும் சிறப்பி டம்பெற்றுள்ளன. கட்டுரைகள், நூல்கள் எழுதுநர்க்கு நல்ல வளமான செய்திகளைத்தரல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் செய்திகள் திரட்டப்பட்டுள்ளன. இதுகாறும் வெளிவராத பல புதிய தலைப் புக்களில் களஞ்சியம் முதன்முதல் சில கட்டுரைகளை வகுத்துத்தருகிறது.

கலைக்களஞ்சியத்தின் முதல் இரு தொகுதிகளிலும் இசைநூல்கள் எழுதி வெளியிட்டுள்ளோரைப் பற்றி மட்டுமே கட்டுரைகள் சுருக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இனிப் பாடுதுறை வல்லுநர்களின், கருவி இசைக்கும் துறை வல்லுநர்களின் வரலாறுகளைப் படங்களுடன் களஞ்சிய இறுதியில் சேர்த்துச் சிறப்பாக அமைக்கப்படல் வேண்டுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வராயிருந்து புதிய இசைத்தொண்டுகள் புரிந்தோரும் இடம்பெறுகின்றனர்.

இந்நூலில் பழமையோடு புதுமையும் சேர்க்கப்பட்டுள்ளது: இன்று நடைமுறையில் உள்ள கற்பனைச்சுரம் பாடுதல், கீர்த்தனை இயற்றுதல், வர்ணம், தில்லானா, கீதம், கீர்த்தனை, கிருதி (இசைப்பனுவல்), தாளம், தாளஇயல்புகள், மோராக்கள், தாள அறுதிகள், தீர்மானங்கள், முத்தாய்ப் புக்கள் சுரவரிசைப் பயிற்சிகள், தானம் பாடுதல் முதலிய பல்வேறு இசை இலக்கணங்களும் எடுத் துக்காட்டுக்கள் தந்து விளக்கப்பட்டுள்ளன; இவற்றின் தோற்றம், வளர்ச்சி, தொடர்ச்சி பற்றிய வரலாறுகள் விளக்கப்பட்டுள்ளன. இவற்றால், இசைமரபு தொடர்ந்து வருவது என்று டாக்டர் எஸ். இராமநாதர் சொல்லியுள்ளதைப் போற்றி இக்களஞ்சியம் ஆங்காங்கு விளக்கியுள்ளது.

துணைவேந்தர் மாண்புமிகு வீர முத்துக்கருப்பன் அவர்கள் தம் அணிந்துரையில் குறிப்பிட் டுள்ளதுபோல், இது தொகுப்பு நூல் மட்டுமன்று; ஆய்வுகள் நிரம்பியுள்ளது என்பதை அறிஞர்கள் கற்றுணரலாம். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இசைத்துறைச் சொற்கள் எல்லாம் பெரும்பா லும் விளக்கப்பட்டுள்ளன. இவை மேலும் மேலும் ஆராய்ச்சி செய்யத் தூண்டுவன. சிலப்பதிகாரம் கூறும் இசையிலக்கணம் கொண்டு, பாட்டு-தொகை, தொல்காப்பியம் முதலிய நூல்களில் காணப்படும் இசைத்துறைத் தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன.

வீ.ப.கா.சுந்தரம்
8-0-94
Download the book தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 2 for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen