Online Library TheLib.net » இசைத் தமிழ் வரலாறு
cover of the book இசைத் தமிழ் வரலாறு

Ebook: இசைத் தமிழ் வரலாறு

00
29.01.2024
0
0
இந்த நூலில், திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலம் முதல் சேக்கிழர் காலம் வரையிலான இசைச் செய்திகள் பல முறையாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இசைக்கப்பட்ட இசைக் கருவிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் பற்றிய பல செய்திகள் தமிழிசை வரலாற்றிற்குப் பெருந்துணை புரிவனவாம்.

யாழிசை பற்றிய பல வகையான தகவல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காண்கிறோம். யாழ்நலம் கூறும் காப்பியமான பெருங்கதையின் ஆசிரியர் கொங்கு வேளிரின் இசைப்புலமைத் திறங்களை ஆசிரியர் தொகுத்தளித்திருப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். இவ்வாறே, சீவக சிந்தாமணியைப் படைத்த திருத்தக்கத் தேவரின் இசைப்புலமையையும் இவர் போற்றியுரைக்கின்றார்.

பாண்டிய, பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் வரலாறுகளில் காணும் இசைத்தமிழ்க் கூறுகள் பல இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தேவாரத் திருப்பதிகங்கள் பண் ஆராய்ச்சிக்குப் பெருங்களமாக விளங்குகின்றன என்பதையும் இந்நூலில் நன்கு விளக்கக் காண்கிறோம்.

மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள், ஆழ்வார் பன்னிருவரின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நூற்றுக்கணக்கான இனிய பண்களில் தாளத்துடன் பாடப்பெற்றவை என்பதற்குப் பல சான்றுகளை இந்நூலில் காணலாம்.

திருமாளிகைத் தேவர் முதலான ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பாவிலுள்ள அனைத்துப் பாடல்களும் இன்னிசைப் பாடல்களே என்பதைப் பண்ணமைதி கொண்டு நிறுவுகிறார் இந்நூலாசிரியர்.

சிலப்பதிகாரத்தின் உரையெழுதிய அடியார்க்கு நல்லாரைப் பின்பற்றியே சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் இசைக்குறிப்புகளை அளித்திருக்கக் கூடும் என்ற கருத்தை ஆசிரியர் நிறுவுகிறார்.

தமிழிசைக் கலைச் சொற்களை அகரநிரலாகத் தொகுத்து இந்த நூல் வழங்குகிறது.
Download the book இசைத் தமிழ் வரலாறு for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen